லிபியாவில் மீண்டும் மோதல் வெடித்தது - 70 பேர் மரணம், 150 பேர் காயம்
லிபிய சபா நகரில் போராளிகளுக்கிடையில் இடம்பெற்ற மோதல்களில் குறைந்தது 70 பேர் பலியாகியுள்ளதுடன் 150 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முன்னாள் கிளர்ச்சியாளர்களும் தோபோ துப்பாக்கிதாரிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மோதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் மேற்படி போராளிக் குழுக்களிடையே புதன்கிழமை மோதல்களை நிறுத்துவதற்கு இணக்கப்பாடு காணப்பட்ட போதும் பின்னர் மோதல் கிளர்ந்தெழுந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறைகளையடுத்து ஆளும் தேசிய அதிகார மாற்று சபையின் உள்ளூர் அதிகாரிகளில் ஒருவரான அப்டெல் மஜீத் செயிப் அல் நாஸர் பதவி விலகியுள்ளார்.
சோவியத் படைகளை அமெரிக்க ஆதரவுடன் நாட்டை விட்டு
ReplyDeleteவிரட்டிய வெற்றியின் சூடு ஆற முன்னரே இதே நிலை ஆப்கானிஸ்தானில் தோன்றியது.
நேட்டோ உதவியோடு கடாபியை படுகொலை செய்து இரத்தம் காயும் நேரம்
இந்த நிகழ்வு.
லிபியா ஆப்கானிஸ்தான் வழியிலா?