Header Ads



நாட்டில் டெங்கு அச்சுறுத்தல் - 60 நாட்களில் 29 மரணங்கள்


இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் மாத்திரம் நாட்டில் 7400 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.  இதில் 29 மரணங்கள் சம்பவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 

பெப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது ஜனவரி மாதத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளது.  அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே இணங்காணப்பட்டுள்ளனர். 

டெங்கு நுளம்பு பரவாதிருக்கும் வண்ணம் சூழலை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது பொது மக்களின் கடமை எனக் கூறியுள்ள சுகாதார அமைச்சு, தொடர்ந்து காய்ச்சல் காணப்பட்டால் உடன் வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. 

No comments

Powered by Blogger.