விண்வெளியில் பாரிய விபத்து தவிர்க்கப்பட்டது - விண்வெளி வீரர்கள் 6 பேர் உயிர் தப்பினர்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் பணியாளர்கள், சிதைவுப் பொருளொன்றுடன் மோதுவதில் இருந்து மயிரிழையில் தப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரஷ்ய ஏவுகணையொன்றின் குறித்த சிதைவு பொருள் தொடர்பான நகர்வு தாமதமாக கண்டறியப்பட்டதால் இந்த நிலைமை ஏற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
குறித்த சிதைவு பொருள் குறைவான அச்சுறுத்தலாக இருந்த போதிலும், தாம் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொண்டதாக அமெரிக்க விமானவியல் மற்றும் விண்வெளி நிர்வாக அமைப்பான நாசா தெரிவித்துள்ளது.
சிதைவு பொருளுடன் சர்வதேச விண்வெளி நிலையம் மோதுவதற்கான சாத்தியங்கள் கடந்த 12 ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ஏற்பட்டதாக நாசா சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஜூன் மாதமும் இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக நாசா அமைப்பை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. மூன்று ரஷ்யர்கள், இரண்டு அமெரிகர்கள் மற்றும் நெதர்லாந்து விண்வெளி வீரர் ஒருவரும் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் பணியாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment