Header Ads



ஈராக்கில் 6 தொடர் குண்டுவெடிப்புக்கள் - 38 பேர் மரணம், 160 பேர் காயம்

ஈராக்கில், பல்வேறு இடங்களில் செவ்வாய்கிழமை நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், 38 பேர் பலியாயினர். ஈராக்கில் அமெரிக்கா நுழைந்த ஒன்பதாமாண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஈராக் தலைநகர் பாக்தாத், மத்திய பாக்தாத், பாக்தாத்தின் தென் பகுதியில் உள்ள ஹில்லா நகர், மேற்கில் உள்ள அன்பார் மாகாணத் தலைவர் ரமாடி, வடபகுதியில் உள்ள கிர்குக், தென்பகுதியில் உள்ள கர்பாலா ஆகிய இடங்களில் நேற்று நடந்த தொடர் குண்டுவெடிப்புகளில், மொத்தம் 38 பேர் பலியாயினர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இம்மாதம் 27 முதல் 29ம் தேதி வரை பாக்தாத்தில், மூன்றாண்டுகளுக்குப் பின் முதன் முறையாக அரபு லீக் மாநாடு நடக்க உள்ள நிலையிலும், ஈராக்கிற்குள் அமெரிக்கா நுழைந்த ஒன்பதாமாண்டு நினைவு நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் சூழலிலும், இந்தக் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின், நாட்டின் இனக் குழுக்கள் மத்தியில் பல்வேறு கலவரங்கள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் மட்டும் நடந்த கலவரங்களில், 150 பேர் கொல்லப்பட்டனர்.


No comments

Powered by Blogger.