Header Ads



முஸ்லிம் என்ற காரணத்திற்காக ஹிஜாப் அணிந்த 5 பிள்ளைகளின் தாய் அடித்துக்கொலை - அமெரிக்காவில் அராஜகம் (படம் இணைப்பு)


ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்மணி 'முஸ்லிம்' என்ற ஒரே காரணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். அதுவும் அவரது வீட்டினுள் புகுந்து அடித்து படுகாயம் செய்துவிட்டு, “தீவிரவாதிகளே நீங்கள் உங்கள் நாட்டுக்கு ஓடுங்கள்” என்று எழுதப்பட்ட துண்டு காகிதத்தைப் போட்டு விட்டு சென்றுள்ளனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 வயதான ஷைமா அல் அவாதி சிகிச்சை பலன் இன்றி நேற்று சனிக்கிழமை மாலை 3 மணியளவில் மரணமடைந்தார்.

இது நன்கு திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது. ஷைமாவின் உடலுக்கு அருகில் போடப்பட்டிருந்த துண்டு காகிதம் கடந்த மாதமும் வீட்டிற்குள் போடப்பட்டிருந்தது. அதனை அக்குடும்பத்தினர், அது ஒரு போலி மிரட்டல் என்று அலட்சியமாக இருந்துவிட்டனர்.

ஷைமா குடும்பத்தின் நண்பரான ஷூரா அல் ஜைதி கூறும் பொழுது  “இது நன்கு திட்டமிட்ட தாக்குதல் என்பது வெளிப்படையாக தெரிகின்றது, காரணம் ஷைமாவின் கணவர் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதும் தான் இந்த படுகொலை நிகழ்ந்து உள்ளது.

யாரோ வீட்டில் நடப்பதை கூர்மையாக கவனித்து தாக்குதலுக்கான சரியான நேரத்திற்காக காத்திருந்தது போல் தெரிகின்றது.” என்றார்.

மிகக் கொடுமையான இந்தத் தாக்குதலில் ஷைமாவின் உயிர் பறி போயிருக்கின்றது. ஷைமாவை கொடூரமான முறையில் கொலைச் செய்ய தூண்டியது அவர் முஸ்லிம் என்பதால்தான் என்ற அல் ஜைதியின் கூற்று உண்மையானால், ஒரு இனத்திற்கு எதிரான வெறுப்பின் அடிப்படையில் நடைபெறும் குற்றம்தான் இது என்பது ஊர்ஜிதம் ஆகின்றது.

இக்கொடூரமானது அமெரிக்காவில் கலிஃபோர்னியா மாகாணத்தில் சாண்டியாகோ கவுண்டியில் உள்ள எல் கஹோன் (El Cajon) என்ற நகரத்தில் ஸ்கை வியூ தெருவில் உள்ள ஷைமாவின் வீட்டில் உள்ள டைனிங் ஹாலில் நடந்துள்ளது. 32 வயதான ஷைமாவிற்கு 5 குழந்தைகள் உள்ளனர்.

1 comment:

  1. ஊடகங்கள், இந்த கொலையை செய்தவர்களை அவர்களின் மதப் பின்னணியுடன்
    அடையாளப் படுத்தவோ, அவர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிடவோ போவதில்லை என்பதுதான் உண்மை.

    ReplyDelete

Powered by Blogger.