Header Ads



பிரிட்டனில் குண்டு பொலிஸார் 53 சதவீதம் - 8 வீத சம்பளத்தை குறைக்கவும் நடவடிக்கை

ராணுவ வீரர்கள், போலீசார் என்றால் மிடுக்காக இருக்க வேண்டும். இதற்கு மிகவும் அத்தியாவசியமாக இருப்பது அவர்கள் தங்களது உடலை முறையாக வைத்துக் கொள்வது தான். ஆனால் சிலரோ உடல் எடை அதிகமாகி தொப்பையுடன் காட்சி தருவதை பார்க்க முடிகிறது. இங்கிலாந்து நாட்டில் இது குறித்து கணக்கெடுப்பு நடத்தினார்கள்.

இதில் 53 சதவீதம் போலீசார் உடை அதிகரித்து குண்டாக இருப்பதும், 100 பேரில் ஒருவர் ஆரோக்கியமற்ற நிலையில் இருப்பதும் தெரியவந்தது. இதனால் இவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடல் பரிசோதனை(பிட்நெஸ் டெஸ்ட்) நடத்தவும், அதில் 3 சோதனைக்குள் உடல் எடையை குறைக்க தவறினால் அவர்களது சம்பளத்தில் 8 சதவீதம் குறைக்கப்படும்.

No comments

Powered by Blogger.