Header Ads



கடாபிக்கு நயவஞ்சகம் செய்த நிக்கலஸ் சர்கோஸி - 5 கோடி யூரோ பணத்தை செலவுக்காக வாங்கினான் - டோனி பிளேயரும் தொடர்பு


பிரான்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோஸிக்கு 2007-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பிரச்சார செலவுக்காக லிபியாவின் முன்னாள் அதிபர் கொலைச் செய்யப்பட்ட முஅம்மர் கத்தாஃபி ஐந்து கோடி யூரோவை வழங்கினார் என்று புலனாய்வு செய்தி இணையதளமான மீடியா பார்ட் ஆவணங்களுடன் வெளியிட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து, பனாமா ஆகிய வங்கிகளில் உள்ள கத்தாஃபியின் அக்கவுண்டுகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட பணத்தை கத்தாஃபி சர்கோஸிக்கு அளித்தார் என்றும், இப்பணம் எப்பொழுது, எங்கே வைத்து அளிக்கப்பட்டது உள்பட அனைத்து ஆவணங்களும் தங்களின் செய்தியாளருக்கு கிடைத்துள்ளதாகவும் மீடியா பார்ட் கூறுகிறது.

ஆனால், இணையதளத்தின் குற்றச்சாட்டை சர்கோஸி மறுத்துள்ளார். சர்கோஸியும், பிரிட்டீஷ் பிரதமராக பதவி வகித்த டோனி ப்ளேயரும் கத்தாஃபியிடம் நண்பர்களாக நடித்துவிட்டு பின்னர் அவருக்கு எதிரான போராட்டம் துவங்கிய வேளையில் பல்டியடித்து நயவஞ்சகமாக எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாக மாறினர் என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் மீடியா பார்டின் செய்தி அமைந்துள்ளது.

பிரிட்டனும், பிரான்சும் உள்படும் நேட்டோ ராணுவம்தான் கத்தாஃபிக்கு எதிரான லிபியா போராட்டத்தில் முன்னணியில் நின்றன. மேலும் கத்தாஃபி உயிருடன் பிடிக்கப்பட்ட பொழுது அவரை விசாரணைச் செய்யாமல் கொலைச் செய்ய ஆதரவாகவும் இந்த நாடுகள் செயல்பட்டன.

கத்தாஃபி உயிருடன் கைது செய்யப்பட்டால் பல ரகசியங்களும் வெளியாகிவிடும் என்ற அச்சமே அவரை கொலைச் செய்ய காரணம் என்று குற்றச்சாட்டு முன்னரே எழுந்தது.

2 comments:

  1. கடாபி மட்டுமா,
    சந்தனக் கடத்தல் வீரப்பன் கைது செய்யப்படாமல்
    கொல்லப்பட்டதும் இது போன்ற காரணங்களுக்காகத்தான்.

    ReplyDelete
  2. muslim alladorai utra nanban akinal edutan nilai
    yarda virappan kada sonnadu

    ReplyDelete

Powered by Blogger.