யாழ்ப்பாணத்தில் 40 பவுண் தங்கநகைகள் வீடுபுகுந்து கொள்ளை
வடமராட்சியில் 2 பெண்கள் தனித்திருந்த வீட்டுக்குள் புதன் கிழமை அதிகாலை நுழைந்த திருடர்கள் 40 பவுண் நகைகளையும் 40 ஆயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையடித்துக் கொண்டு தப்பியோடியுள்ளனர். அதிகாலை 4 மணியளவில் வடமராட்சி அல்வாயின் எல்லையில் உள்ள திக்கத்தில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.
திருடர்களைக் கண்டு விழித்தெழுந்த பெண்ணொருவர் அவர்களுடன் போராடிய போது ஆயுதமொன்றினால் அவரைக் குத்திக் காயப்படுத்தி விட்டு திருடர்கள் தப்பித்துச் சென்றுள்ளனர்.
தாயும் மகளும் வசித்த இவ்வீட்டில் அவர்கள் இருவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த வேலையிலேயே அதிகாலை 4 மணியளவில் வீட்டின் பின்புறத்தால் ஏறி உள்ளே நுளைந்த திருடர்கள் வீட்டைச் சல்லடை போட்டுத் தேடி அங்கிருந்த 40 பவுண் நகைகளைத் திருடியுள்ளனர்.
பின் தாயும் மகளும் உறங்கிக் கொண்டிருந்த இடத்துக்குச் சென்ற திருடர்கள் தாயின் கழுத்தில் இருந்த சங்கிலியை அறுக்க முற்பட்டனர்.அவ்வேளை விழித்தெழுந்த மகள் திருடர்களுடன் போராடியுள்ளார். இறுதியில் தாம் கொண்டு வந்த கத்தி போன்ற ஆயுதத்தால் அவரைத் தாக்கிவிட்டு திருடர்கள் நகைகளுடன் தப்பித்துச் சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தில் துரைசிங்கம் சசிரேகா (வயது 35)என்ற பெண்ணே காயமடைந்தவராவார். இச்சம்பவம் தொடர்பாக பருத்தித் துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Post a Comment