O/L பரீட்சையில் 3.908 மாணவர்களுக்கு 9A, 12.795 பேருக்கு 9F - தமிழ் மொழிமூல மாணவர்கள் பின்னடைவு
2011 டிசம்பர் மாதம் நடைபெற்ற க. பொ. த. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றிய 2,70, 314 பாடசாலை பரீட்சார்த்திகளில் 1, 64, 191 பேர் க. பொ. த உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
தாம் தோற்றிய 9 பாடங்களிலும், ‘ஏ’ தரத்தில் 3908 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர். 12,795 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘எவ்’ பெற்று சித்தியடையவில்லை என கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.
க. பொ.த சாதாரண தர பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதை அடிப்படையாகக் கொண்டு அகில இலங்கை ரீதியில் சிறப்பு சித்தி பெற்ற முதல் 10 மாணவர்களின் பெயர்கள் வெளியிடுவதற்கான செய்தியாளர் மாநாடு நேற்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. பரீட்சை ஆணையாளர் நாயகம் புஷ்பகுமார, அமைச்சின் செயலாளர் எச். எம். குணசேகராவுடன் அமைச்சர் பந்துல குணவர்தனா கலந்துகொண்டு பேசும்பேதே மேற்கண்ட தகவல்களை வெளியிட்டார்.
அகில இலங்கை ரீதியில் திறமை சித்திபெற்று முதல் 10 பேரின் பெயர்களும் நேற்று வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களுக்கும் கொழும்பு, மாத்தறை, கண்டி, ரம்புக்கன உட்பட 13 மாணவ, மாணவிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் டொப் டென் முதற் பத்துப் பேரின் பெயர்ப்பட்டியலில் எந்தவொரு தமிழ் மொழி மூல மாணவனோ மாணவியோ தெரிவாகவில்லை என்றும் அமைச்சர் பந்துல தெரிவித்தார்.
அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல மாணவர்கள் எவரும் 10 வரிசைக்குள் வரவில்லை எனினும் மாவட்ட மட்டத்தில் முதல் 10 வரிசையில் வரலாம் எனக் கூறிய அமைச்சர் பந்துல மாவட்ட மட்ட, வலய மட்டத்தில் திறமைச் சித்திபெற்றவர்களின் விபரம் இன்று வெளியிடப்படும் என்றும் கூறினார்.
சகல பாடங்களிலும் ‘ஏ’ சித்திபெற்றவர்கள் மேல் மாகாணத்திலேயே உள்ளனர். இங்கு 2001 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர். அதேபோன்று சகல பாடங்களிலும் ஆகக் கூடுதலாக ‘எவ்’ பெற்று சித்தியடையாதவர்களும் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளது. இங்கு 2 692 பேர் ‘எவ்’ பெற்றுள்ளனர்.
வடக்கு, கிழக்கில் ஆகக் குறைவான மாணவர்களே சகல பாடங்களிலும் ‘எவ்’ பெற்றுள்ளனர். வடக்கில் 64 மாணவர்களும், கிழக்கில் 792 மாணவர்களும் சித்தியடையவில்லை.
இம்முறை வெளியாகியுள்ள க. பொ. த சாதாரண தர பெறுபேறுகளுடன் கடந்த வருட பெறுபேறுகளை ஒப்பிடுகையில் சகல பாடங்களிலு ஏ சித்தி பெற்றவர்கள் 2010 ஆம் ஆண்டு 3057 மாணவர்கள், 2011 இல் 3908 மாணவர்கள், சகல பாடங்களிலும் ‘எவ்’ புள்ளிபெற்று சித்தியடையாதவர்கள் 2010 ஆம் ஆண்டு 14, 411 மாணவர்கள், 2011 ஆம் ஆண்டு 12,795 மாணவர்கள் எனவும் பதிவாகியுள்ளது என பரீட்சை ஆணையாளர் டபிள்யூ எம். என். ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கை 12797 என்று வந்திருக்க வேண்டும்,
ReplyDeleteஉங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும்
அவர்கள் இருவரும்
இம்முறை பரிட்ச்சை எழுதவில்லை என்பது.