இலங்கையில் 3 மில்லியன் முஸ்லிம்கள் - ஹஜ் கோட்டாவை அதிகரிக்க சவூதி அரேபியாவிடம் கோரிக்கை
ஹஜ் யாத்திரைக்காக ஐயாயிரத்து 500 இலங்கை யாத்திரிகர்களை அனுமதிக்குமாறு, இலங்கை குழுவினர் ரியாத் அரசாங்கத்திடம் கோரியுள்ளனர்.
இது தொடர்பில் அங்கு விஜயம் செய்துள்ள சிரேஷ்ட்ட அமைச்சர் பௌசிக்கும், அந்த நாட்டு ஹஜ் விவகார அமைச்சருக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் 3 மில்லியனுக்கும் அதிகமான முஸ்லிம் மக்கள் உள்ளனர். தற்போது சமாதானமான சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில், அதிகமான முஸ்லிம்களுக்கு ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் ஹஜ் யாத்திரைக்கான கோட்டாவை அதிகரிக்குமாறு கோரி இருப்பதாக, பௌசி தெரிவித்துள்ளார்
Post a Comment