இலங்கை ஊடகவியலாளர்களின் நலனுக்காக 374 மில்லியன் செலவில் ஊடக அபிவிருத்தி மத்திய நிலையம் அமைப்பு - 30 ஆம் திகதி மஹிந்த திறந்துவைப்பார்
ஊடகவியலாளர்களது நலனைக் கருத்திற் கொண்டு ஊடக அபிவிருத்தி மத்திய நிலையம் திறப்பு. ஊடகத்துறைக்கு நவீன வசதிகள் வழங்கும் முகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஊடக அபிவிருத்தி மத்திய நிலையம் இம்மாதம் 30ம் திகதி திறந்துவைக்கப்படவுள்ளது.
ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் பதில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன ஆகியோரின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவே இப்புதிய கட்டடத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
இக் கட்டடமானது 374 மில்லியன் ரூபா செலவில் ஐந்து மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
அமைக்கப்பட்டுள்ள இந்த கட்டடத்தில் நவீன வசதிகள் கொண்ட கேட்போர் கூடம், ஊடக ஆய்வுக்கான நூலகம், இரு கணனிப் பிரிவுகள், அரசாங்க திரைப்படப் பிரிவின் நூதனசாலை என்பன ஊடகவியலாளர்களினுடைய நலனைக் கருத்திற் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன.
Post a Comment