Header Ads



பிரித்தானியர் கிறிஸ்த்தவத்தை விட்டு ஒடுகின்றனர் - முஸ்லிம்கள் 37 வீதமாக அதிகரிப்பு (பட்டியல் இணைப்பு)


மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் 2030-ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் கிறிஸ்தவ நாடு என்ற பதவியை இழந்துவிடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.

கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் வெளியேறுகின்றனர். அதேவேளையில் மதத்தை மறுப்பவர்கள், மதசார்பற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. இவ்வறிக்கையை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.

2030-ஆம் ஆண்டில் மதசார்பற்றவர்கள் கிறிஸ்தவர்களை விட அதிகமாக மாறுவார்கள் என்று லேபர் ஃபோர்ஸ் சர்வே கூறுகிறது.

அதேவேளையில் கிறிஸ்தவம் தளர்ச்சியை சந்தித்த போதும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள், புத்த மதத்தினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

கடந்த 6 ஆண்டுகளில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 37 சதவீதம் அதிகரித்து 26 லட்சமாக மாறியுள்ளது. ஹிந்துக்களின் எண்ணிக்கை 43 சதவீதம் அதிகரித்து ஏழு லட்சத்து 90 ஆயிரமாக மாறியுள்ளது. பெளத்தர்களின் எண்ணிக்கை 74 சதவீதமாக அதிகரித்து 2 லட்சத்து எழுபது ஆயிரமாக மாறியுள்ளது.பிரிட்டனில் 2010-ஆம் ஆண்டு 4.11 கோடி கிறிஸ்தவர்கள் இருப்பதாக ஆய்வறிக்கை கூறுகிறது. இக்கால கட்டத்தில் மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை 49 சதவீதம் அதிகரித்து 1.34 கோடி அதிகமாகி உள்ளது.

No comments

Powered by Blogger.