வடக்கில் 32.659 முஸ்லிம்களும், யாழ்ப்பாணத்தில் 1.874 பேரும் வசிக்கிறார்களாம் - சனத்தொகை கணக்கெடுப்பு முடிவு
வடமாகாணத்தில் உள்ள மொத்த சனத்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான சனத்தொகையை யாழ். மாவட்டமே கொண்டுள்ளது.
934 ஆயிரத்து 392 தமிழர்களும், 32 ஆயிரத்து 659 முஸ்லிம்களும், 21 ஆயிரத்து 860 சிங்களவர்களும் வடமாகாணத்தில் 2011 ஆம் ஆண்டு வசிப்பதாக புள்ளி விவரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடமாகாணத்தில் கடந்த வருடம் பாதுகாப்பு அமைச்சால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புத் தகவல்கள் புள்ளி விவரத்திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிட்டப் பட்டுள்ளதாவது:
யாழ்ப்பாண மாவட்டத்தில் 560 ஆயிரத்து 905 இலங்கை தமிழர்களும், 3 ஆயிரத்து 550 இந்தியத் தமிழர்களும், ஆயிரத்து 874 முஸ்லிம்களும், 746 சிங்களவரும், வேறு இனத்தவர்கள் 56 பேருமாக 95 ஆயிரத்து 430 பேர் வசிக்கின்றனர்.
வவுனியா மாவட்டத்தில் 134 ஆயிரத்து 709 இலங்கைத் தமிழர்களும், ஆயிரத்து 956 இந்திய தமிழர்களும், 11 ஆயிரத்து 491 முஸ்லிம்களும், 16 ஆயிரத்து 555 சிங்களவர் களும், வேறு இனத்தவர்கள் 141 பேருமாக 164 ஆயிரத்து 852 பேர் வசிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 59 ஆயிரத்து 540 இலங்கைத் தமிழர்களும், 596 இந்திய தமிழர்களும், 2 ஆயிரத்து 390 முஸ்லிம்களும், 3 ஆயிரத்து 966 சிங்களவர்களும், வேறு இனத்தவர்கள் 34 பேருமாக 66 ஆயிரத்து 526 பேர் வசிக்கின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 101 ஆயிரத்து 585 இலங்கை தமிழர்களும், ஆயிரத்து 194 இந்திய தமிழர்களும், 774 முல்ஸிம்களும், 138 சிங்களவர்களும், வேறு இனத்தவர்கள் 26 பேருமாக 103 ஆயிரத்து 717 பேர் வசிக்கின்றனர்.
வட மாகாணத்தில், யாழ்ப்பாணத்திலும், கிளிநொச்சியிலும்
ReplyDeleteமுஸ்லிம்கள் இப்படி குறைவாக இருக்க என்ன காரணம்?