Header Ads



தமிழீழம் மலர உதவுங்கள் - ஒபாமாவிற்கு 31.000 கையொப்பங்களுடன் தமிழர்கள் மனு

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு பிரதிநிதிகள், பிளேக்கின் அழைப்பை ஏற்று பிளேக்கையும் வேறு பல அமெரிக்க இராஜாங்க உத்தியோகத்தர்களையும் வோஷிங்டனில் சந்தித்தனர். அங்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இலங்கையில் துயருறும் தமிழ் மக்களைப் பற்றி கதைத்தனர்.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு 31,000 மேற்பட்ட கையொப்பங்கள் அடங்கிய, தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பை ஆதரிக்கக் கோரிய மனு ஒன்றை பிளேக்கிடம் கையளித்தனர். இன்னுமொரு பிரதி மனுவை கிளின்டனிடம் கொடுக்கும்படி பிளேக்கிடம் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்ட பிளேக் உடனே தனது அலுவலக மேலாளரிடம் கொடுத்து அதை கிளின்டனிடம் கொடுக்கும்படி கொடுத்தார்.

கடந்த வருடம் தென்சூடானில் நடந்தது போன்றதே இந்த வாக்கெடுப்பு என்றும், இதன் மூலம் அங்கு மக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வழியேற்பட்டது என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் பிளேக்கிற்கு கூறினர். மேலும் கூறுகையில், ஒரு அரசினால் பாதிக்கப்பட்ட ஒரு இனத்தை, இந்த வாக்கெடுப்பின் மூலம், அவர்களின் அபிப்பிராயத்தை அறிவது ஒரு நியாயமான செயலாகும் என்றும் கூறினர்.

தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பினர் இந்த மனுவில் கையொப்பமிட்ட 31,000இற்கும் மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றனர். இந்த மனுவின் மூலம் வடக்குக் கிழக்கில் தமிழீழம் மலருமாயின் இந்த மனு வரலாற்று ஆவணமாகப் பேணப்படும் என்றும் கூறினர்.
தினக்கதிர்

No comments

Powered by Blogger.