Header Ads



காதல் திருமணங்கள் 30 சதவீதம் தோல்வியில் முடிவடைகின்றன - அமைச்சர் மைத்திரிபால சிறிசேன

25 வயதிற்கும் குறைந்தவர்கள் செய்து கொள்ளும் திருமணங்கள் 75 சதவீதம் தோல்வியில் சென்று முடிவடைவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியானதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

குடும்ப வாழ்க்கை தோல்வியில் முடிவடைவதற்கு காரணம் 25 வயதிற்கும் குறைந்து திருணம் செய்து கொள்வது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிராம பகுதிகளில் இவ்வாறான திருமணங்கள் அதிகம் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நிரந்தர தொழில் இல்லாத ஒருவருக்கு இவ்வாறு திருமணம் செய்து வைப்பதால் சிறிது காலத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு குடும்ப வாழ்க்கை தோல்வியில் சென்று முடிகிறது.

மேலும் கல்வி அறிவு குறைவும் குடும்ப வாழ்க்கை தோல்விக்கு ஒரு காரணமாகிறது.  காதல் திருமணங்கள் 30 சதவீதம் தோல்வியில் முடிவடைவதாக சுகாதார அமைச்சின் ஆய்வு தெரிவிக்கின்றது.

No comments

Powered by Blogger.