க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு இம்மாதம் 30 ஆம் திகதிவரை விண்ணப்பிக்க முடியும்
2012 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர உயர் தர பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இம்மாதம் 30 ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீ்ட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எச்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
புதிய பாடவிதானம் மற்றும் பழைய பாடவிதானங்களுக்கான விண்ணப்பங்கள் இதற்கமைய ஏற்றுக்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார். பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க முடியும் என அவர் தெரிவித்தார்.
தனியார் விண்ணப்பதாரிகள் உரிய காலத்திற்குள் தமது விண்ணப்பங்களை அனுப்பி வைக்க வேண்டும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment