அறையில் பூட்டப்பட்ட 3 வயது சிறுவன் - பசியின் கொடுமையால் தலைமுடி சாப்பிட்டான்
இங்கிலாந்தில் உள்ள சவுத்வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர் லிசா புரூக்ஸ் (25). இவருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கணவரை பிரிந்து வாழும் புரூக்ஸ் தாமஸ் லீவிஸ் (22) என்பவருடன் தனது மகனுடன் தங்கியுள்ளார்.
இந்த நிலையில் லிசா புரூக்ஸ்சும், தாமஸ் லீவிசும் சேர்ந்து 3 வயது சிறுவனை ஒரு இருட்டு அறையில் போட்டு பூட்டி சிறை வைத்தனர். அவனுக்கு உணவு மற்றும் தண்ணீர் எதுவும் கொடுக்காமல் பல நாட்கள் பட்டினி போட்டனர்.
இதனால் பசி தாங்காத அச்சிறுவன் தனது தலை முடியை பிய்த்து தின்று உயிர் வாழ்ந்தான். இதை தொடர்ந்து உயிருக்கு போராடிய அவன் மயக்கம் அடைந்தான்.
இதுபற்றி தகவல் அறிந்த சமூக நல ஆர்வலர் போலீஸ் உதவியுடன் அச்சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து உயிர் பிழைக்க வைத்தார். இதற்கிடையே சிறுவனை அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்த தாய் லிசா புரூக்சும், அவரது கணவர் தாமஸ் லீவிசும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
நன்றி - இந்தியா மாலைமலர்
Post a Comment