Header Ads



சிறைகளில் உள்ள கைதிகளுள் 2.848 பேர் எந்த கல்வி அறிவையும் பெறாதவர்கள் அமைச்சர் சந்திரசிறி கஜதீர

தற்போது சிறைகளில் உள்ள கைதிகளுள் 2 ஆயிரத்து 848 பேர் எந்த கல்வி அறிவையும் பெறாதவர்கள் என புனர்வாழ்வளிப்பு மற்றும் சிறைச்சாலை அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளது.

2010ம் ஆண்டின் அறிக்கையின் படி இலங்கையில் மொத்தமாக 32 ஆயிரத்து 128 கைதிகள் உள்ளனர். அவர்களுள் 5 ஆயிரத்து 151 பேர் ஐந்தாம் வகுப்பு வரையில் கல்வி கற்றவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் சிறையில் உள்ள கைதிகளுக்கு கல்வி புகட்டும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.

சிறைக்கைதிகளின் நலன் கருதி அவர்களுக்கான பாடசாலை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்த அவர். முதற்கட்டமாக 400 கைதிகள் இதில் கல்வி கற்கும் வாய்ப்பை பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
 

1 comment:

  1. சிறைக் கைதிகளுக்கு பாடசாலை ஆரமிப்பதுக்கு முன்னர்,
    அமைச்சர்களுக்காகவும் ஒன்றை அவசரமாக ஆரம்பிக்க வேண்டும்.

    எவ்வித கல்வி அறிவையும் பெறாதவர்கள் அமைச்சரவையிலும் உள்ளனர்.

    ReplyDelete

Powered by Blogger.