Header Ads



இஸ்ரேலின் கொலைவெறி தாக்குதல் தொடருகிறது - காஸாவில் வபாத்தானவர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு

இஸ்ரேல் தாக்குதல் தீவிரமாக தொடரும் காஸ்ஸாவில் நேற்று மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டனர். தெற்கு காஸ்ஸா நகரமான கான் யூனுஸிலும், ஜபலிய்யாவிலும் இஸ்ரேல் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர் என்று மருத்துவமனை வட்டாரங்களை மேற்கோள்காட்டி ப்ரஸ் டி.வி கூறுகிறது.

கொலைச் செய்யப்பட்டவர்களில் 15 வயதான மாணவனும் அடங்குவார். பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இஸ்ரேலிய விமானங்கள் குண்டு வீசியதாக அல் அரேபியா சேனல் கூறுகிறது.

ஞாயிற்றுக்கிழமை நடந்த தாக்குதலில் 13 வயது சிறுவன் கொல்லப்பட்டிருந்தான். கடந்த வெள்ளிக்கிழமை துவங்கிய இஸ்ரேலின் தாக்குதலில் மரணத்த ஃபலஸ்தீனர்களின் எண்ணிக்கை இத்துடன் 23 ஆக உயர்ந்துள்ளது. காஸ்ஸாவின் பல்வேறு பகுதிகளில்  இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் 40 பேருக்கு காயம் ஏற்பட்டது.

போராளிகள் ஆயுதங்களை பாதுகாத்து வைத்திருக்கும் மையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.

இதனிடையே இஸ்ரேலின் தாக்குதலை தொடர்ந்து காஸ்ஸாவில் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.

காஸ்ஸாவில் இஸ்ரேல் நடத்தும் அராஜக தாக்குதல்களுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. நிரபராதிகளை கொலைச் செய்யும் இஸ்ரேலின் விமான தாக்குதலை உடனடியாக நிறுத்தவேண்டும் என்று சீன வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் லியு வெய்மின் வலியுறுத்தியுள்ளார்.





No comments

Powered by Blogger.