இலங்கை ஹாஜிகளின் நலன் - அமைச்சர் பௌஸி 20 ஆம் திகதி மக்கா செல்கிறார்
ஹஜ் முன்னேற்பாடுகளைக் கவனிப்பதற்கென அமைச்சர் பெளஸி தலைமையிலான விசேட குழுவொன்று எதிர் வரும் 20ம் திகதி மக்கா செல்லவுள்ளது. இந்தக் குழு ஹஜ்ஜுக்குப் பொறுப்பான சவூதி அமைச்சரைச் சந்தித்து இலங்கை ஹாஜிகளுக்கு தேவையான வசதிகளை பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமென அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸி தெரிவித்தார்.
கொழும்பில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது,
பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை சிலர் போலியாக தயாரித்து அனுப்பி வைத்ததை காணக்கூடியதாக இருந்ததனால் ஏமாற்று நடவடிக்கைகளை தவிர்ப்பதற்காக பதிவு செய்தவர்களுக்கு மீளளிக்கப்படக் கூடிய 25,000 ரூபாவை திணைக்களத்திற்கு செலுத்துமாறு வேண்டினோம். பெரும் பாலானவர்கள் இதனை செலுத்தியிருந்ததனால் எதிர்வரும் 23ம் திகதி வரையில் இந்த 25,000 ரூபாவை வங்கியில் செலுத்தி தங்கள் பதிவினை உறுதிப்படுத் திக்கொள்ள முடியும்.
சிலர் நினைப்பது போன்று இது பதிவுக் கட்டணம் அல்ல. மாறாக கோட்டா பகிர்ந்தவுடன் இவர் ளது பெயர் பட்டியலோடு முகவர் நிலையங்களுக்கோ அல்லது விண்ணப் பதாரிகளுக்கோ மீள ஒப்படைக்கப்படும். இம்முறை முகவர் நிலையங்களை தெரிவு செய்யும் போது கடந்த காலங்களில் சிறப்பாக சேவைகளை வழங்கிய முகவர் நிலையங்கள் மாத்திரமே தெரிவு செய் யப்படும். தங்களது சேவையில் குறைபாடுகளை மேற்கொண்ட முகவர் நிலையங்கள் தெரிவு செய்யப்படமாட்டாது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
இம்முறை கோட்டா வரையறுக்கப்பட்டிருப்பதன் காரணமாக கடந்த வருடம் போல் முதன் முறையாக ஹஜ் கடமை நிறைவேற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கவிருக்கின்றோம். எமக்கு கிடைக் கப்பெற்றுள்ள விண்ணப்பங்களை பரி சீலனை செய்யும் போது “பதல் ஹஜ்” என்ற அடிப்படையில் மரணித்த தாய், தகப்பன், சகோதரர்கள் போன்ற வர்களுக்காக ஹஜ் கடமை நிறைவேற்றுவதற்காக வேண்டி விண்ணப்பங்கள் பல கிடைக்கப் பெற்றுள்ளதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
போதியளவு கோட்டாக்கள் கிடைக்கப் பெறும் சந்தர்ப்பத்தில் இவ் விண்ணப்பங்கள் கருத்திற்கொள்ளப் படும் என்பதை அறியத்தருவதோடு ஹஜ் செய்யாத மஹ்ரம்களுக்காக வேண்டி சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்கள் கவனத்திற் கொள்ளப்படும் என அறியத் தருகின்றேன். இதுவரை திணைக்களத்தில் எந்தவொரு முகவர் நிலையமும் பதியப்படவில்லை என்பதை அறியத்தருகின்றேன். யாரும் எந்தவொரு முகவர் நிலையத்திற்கும் கட்டணங்களை செலுத்தியிருந்தால் அதற்கு திணைக்களம் பொறுப்புக் கூற மாட்டாது என்பதையும் அறியத்தருகின்றேன் என்றார்.
Post a Comment