Header Ads



சவுதி அரேபியா பெண்கள் விளையாட்டில் சாதனை படைக்கிறார்களாம்


சவுதி அரேபியாவில் பெண்கள் பல்வேறு விளையாட்டில் பங்கேற்று வருகின்றனர். நாடுகளில், பெண்களுக்கு நிறைய கட்டுப்பாடுகள் உள்ளன. எண்ணெய் வளம் மிக்க சவுதி அரேபியா, அதிக வசதி கொண்ட பணக்கார நாடாக இருந்தாலும், பெண்கள் கார் ஓட்ட அனுமதிப்பதில்லை. இதே வரிசையில், அவர்கள் விளையாடுவதற்கும் அனுமதியில்லாத நிலை காணப்படுகிறது. இதையும் மீறி, பல தனியார் பள்ளிகளில், வெளிப் பார்வைக்கு தென்படாத இடங்களில் விளையாட அனுமதி தரப்படுகிறது. பெண்கள் குதித்து விளையாடினால், அவர்களின் கன்னித் திரை கிழிந்து விடும் என்பதால், விளையாட அனுமதிப்பதில்லை என, அங்கே வெளிப்படையாகத் தெரிவிக்கின்றனர்.

அதனால், கால்பந்து, கூடைப்பந்து விளையாட்டு, பெண்கள் கற்பனைக்கும் எட்டாத விஷயமாகும். ஆனால், அதையும் தாண்டி, சிலர் பயிற்சிபெற்று, சமீபத்தில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூர் சென்று விளையாடி, பர்தாவுடன் போட்டோவுக்கு போஸ் அளித்தனர்.இந்த வெற்றிக்குக் காரணம், மன்னர் அப்துல்லா பெண்களுக்கு, அரசியலில் பங்கேற்க உரிமை தந்ததால், சிலர் அதை அடுத்து, பெண்களுக்கு பயிற்சி அளித்து, வெளிநாடுகள் சென்று குழுவாக விளையாட அனுமதிக்க முடிந்தது. அது, தொடர்ந்து வெற்றியாக அமலாக்கம் செய்யப்படுகிறது.

வர்த்தக ரீதியாக, உலகச் சந்தையில் முக்கிய நாடாக விளங்கும் சவுதி அரேபியா, லண்டனில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், இந்த நாட்டு பெண்களை பங்கேற்கச் செய்ய வேண்டும் என, பெண் உரிமை அமைப்புகளின் சார்பில் வற்புறுத்தப்பட்டு வருகிறது.கடந்த 2009ம் ஆண்டு, சவுதி அரேபிய பெண்கள் குழு, ஜோர்டான் நாட்டுக்கு சென்று, விளையாட்டில் பங்கேற்றுத் திரும்பிய உடன், "வெட்கம் கெட்ட பெண்கள்' என்ற தலைப்பில், உள்ளூர் பத்திரிகை ஒன்று, அவர்களது படத்துடன் செய்தி வெளியிட்டது. ஆனால், இப்போது அம்மாதிரியான சூழ்நிலை இல்லை. மாறி வருகிறது.சவுதியில் உள்ள விளையாட்டு பயிற்சி கூடங்களின் சுற்றுச் சுவர், 16 அடி உயரம் கொண்டவை. அதுமட்டுமல்லாது, இங்கு பயிற்சி பெற, மாதக் கட்டணம் பல ஆயிரம் ரூபாய். இவ்வளவயும் தாண்டி, பெண்கள் விளையாட முன்வந்துள்ளது, அங்கே நடக்கும் அதிசயமாக, உலக அரங்கில் பேசப்படுகிறது. 



No comments

Powered by Blogger.