பாகிஸ்தான் மக்கள் தொகை 19 கோடியே 23 லட்சமாக உயர்வு
பாகிஸ்தானில், கடந்த 13 ஆண்டுகளில் மக்கள் தொகை 46 சதவீதம் அதிகரித்துள்ளது.பாகிஸ்தானில், கடந்த 98ம் ஆண்டு, 13 கோடியே 85 லட்சம் மக்கள் தொகை இருந்தது. கடந்தாண்டு நிலவரப்படி மக்கள்தொகை, 19 கோடியே 23 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதில், பலுசிஸ்தான் மாகாணத்தில் தான் மக்கள்தொகை கணிசமாக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் குறைவான அளவுக்கு தான் மக்கள் தொகை கூடியுள்ளது.பலுசிஸ்தானில், கடந்த 98ல், 55 லட்சம் பேர் இருந்தனர். கடந்த ஆண்டு கணக்கெடுப்பின் படி, ஒரு கோடியே 31 லட்சத்து 62 ஆயிரம் பேர் உள்ளனர்.
இன்னும் இந்த மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்படவில்லை.சிந்து மாகாணத்தில் 98ல், 3 கோடியே 43 லட்சம் பேர் இருந்தனர். 2011ம் ஆண்டு நிலவரப்படி, இங்கு மக்கள்தொகை 5 கோடியே 52 லட்சமாக உயர்ந்துள்ளது.பாகிஸ்தான் காஷ்மீரில் 98ல் 29 லட்சம் பேர் இருந்தனர். கடந்தாண்டு இங்கு மக்கள்தொகை 36 லட்சமாக உயர்ந்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில், 7.36 கோடியாக இருந்த மக்கள்தொகை 9.13 கோடியாக அதிகரித்துள்ளது.
Post a Comment