Header Ads



ஓ.எல். பரீட்சை முடிவு சரியில்லையாம் - 17 வயது மாணவி தற்கொலை

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகள் வெளியானதன் பின்னர் மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நோவூட் காவல்துறைப் பிரிவிற்கு உட்பட்ட சென் ஜோன் டிலரி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதான மாணவி ஒருவர், தனது வீட்டினுள் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை பெறுபேறுகள் திருப்திகரமாக அமையவில்லை என்ற காரணத்தினாலேயே அவர் இந்த தற்கொலையில் ஈடுபட்டதாக காவல்துறையினரின் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. இன்று காலை பெறுபேறுகள் வெளியானதன் பின்னர், அவரது தந்தை நகரத்திற்குச் சென்று இணையதளத்தின் ஊடாக தனது புதல்வியின் பெறுபேறுகள் குறித்து தொலைபேசியின் ஊடாக வீட்டிற்கு அறிவித்திருந்தார்.

பின்னர், வீட்டிற்கு அவர் திரும்பிய போது, புதல்வி தற்கொலை செய்து கொள்ளப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது. தற்கொலை செய்து கொண்ட மாணவி, கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையில் இரண்டாவது முறையாக தோற்றியிருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, களுத்துறை தெதியவல பிரதேசத்திலும், மாணவி ஒருவர் பெறுபேறுகளில் திருப்தியடையாத நிலையில், அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நாகொட மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments

Powered by Blogger.