Header Ads



சர்வதேச காசநோய் தினம் - ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலி

காசநோய் பரவுதல் பற்றியும், அதை தடுப்பது குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மார்ச் 24ம் தேதி சர்வதேச காசநோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோயால் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் பலியாகின்றனர். இதில் பெரும்பாலானோர் ஏழை நாடுகளைச் சேர்ந்தவர்கள்.

அறிகுறி:"டியூப்பர்குளோசிஸ் பாக்டீரியா நுண்கிருமிகளால்' காற்றின் மூலம் காசநோய் பரவுகிறது. இது முதலில் நமது நுரையீரலை பாதிக்கிறது. தொடர்ந்து சளி இருப்பது, எடை குறைவு, காய்ச்சல், மார்பு வலி, இரவில் வேர்ப்பது, கால் மற்றும் கைகள் பலம் குன்றுதல் போன்றவை இதன் அறிகுறி. நோய் பாதிக்கப்பட்டவர் இருமுவதன் (சளி) மூலம் இந்நோய் மற்றவர்களுக்கும் பரவுகிறது.

ஆண்டுதோறும் 90 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு, ஏற்கனவே காசநோய் உள்ளவர்களிடமிருந்து பரவுகின்றது. உலக சுகாதார நிறுவனம் "காசநோயை தடுக்கும் திட்டம் 2006-2015' என்பதை உலகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது.காசநோயின் பாதிப்பு உலகம் முழுவதும் உள்ளது. ஆனால் வளரும் நாடுகளில் குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. 2008ம் ஆண்டு கணக்கின் படி 1 கோடியே 10 லட்சம் மக்கள் காசநோயால் பாதிக்கப்பட்டனர்.

இதில் எச்.ஐ.வி., நோயாளிகள் 5 லட்சம் பேர் உட்பட 18 லட்சம் பேர் பலியாகினர். இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா, நைஜீரியா மற்றும் இந்தோனேசியா உள்ளிட்ட 22 நாடுகளில் காசநோயால் புதிதாக பதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.சிகிச்சை துவக்கத்திலேயே இதற்கு சிகிச்சை மேற்கொள்வது மற்றும் நீண்ட கால சிகிச்சை ஆகியவைகள் இந்நோயிலிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையாகும்.




No comments

Powered by Blogger.