Header Ads



ஆப்கானிஸ்தானில் 16 முஸ்லிம்களை படுகொலை செய்த அமெரிக்கனுக்கு அச்சம்பவம் ஞாபகத்தில் இல்லையாம்


ஆப்கானில் பெண்கள், குழந்தைகள் உள்பட 16 கிராமவாசிகளை கொடூரமாக கொலைசசெய்த வெறிப் பிடித்த அமெரிக்க ராணுவ வீரனுக்கு அச்சம்பவம் குறித்து ஞாபகம் இல்லை என்று அவனது வழக்கறிஞர் கூறுகிறார்.

சம்பவத்திற்கு முன்பும், பின்பு நடந்த நிகழ்வுகளை குறித்து சிறிது ஞாபகம் இருந்தாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து முற்றிலும் நினைவு இல்லை என்று வெறிப்பிடித்த அமெரிக்க ராணுவ வீரன் ராபர்ட் பெய்ல்ஸின் வழக்கறிஞர் ஜான் ஹென்றி கூறுகிறார்.

கன்ஸாஸில் ஃபோர்ட் லிவன்வர்த் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பெய்ல்ஸ் மீது உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று அமெரிக்க ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனைத் தொடர்ந்து பெய்ல்ஸிற்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஞாபகம் இல்லை என்று அவரது வழக்கறிஞரின் அறிக்கை வெளியாகியுள்ளது. பெய்ல்ஸின் மனோநிலையில் எவ்வித குழப்பமில்லை என்று முன்னர் அமெரிக்கா கூறியது. ஆனால், மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று வழக்கை தட்டிக்கழிக்க தற்பொழுது முயற்சி நடைபெறுவதாக கருதப்படுகிறது.

அதேவேளையில் பெய்ல்ஸ் ஏற்கனவே மோசடிக் குற்றத்தில் கைது செய்யப்பட்டான் என்ற செய்தி வெளியாகியுள்ளது. 15 லட்சம் டாலர் பண மோசடி நடத்தியதாக நேசனல் அசோசியேசன் ஆஃப் செக்யூரிட்டீஸ் டீலேர்ஸ் பெய்ல்ஸை குற்றவாளி என்று கண்டுபிடித்ததாக அல் அரேபியா கூறுகிறது.

No comments

Powered by Blogger.