Header Ads



மண்வெட்டியால் மகனைக் தாக்கி கொலை செய்த தந்தைக்கு 13 வருட சிறை

மண்வெட்டியால் தாக்கி தனது மகனைக் கொலை செய்ததாக நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஹொரவப்பொத்தானை பிரதேசத்தைச் சேர்ந்த தந்தை ஒருவருக்கு 13 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணை அநுராதபுரம் மேல் நீதிமன்றில் நடைபெற்றது.  சந்தேகநபருக்கு சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 50 ஆயிரம் ரூபா அபராதமும் செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  அவ்வாறு அபராதத் தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் மூன்று மாதகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

2004 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 25ஆம் திகதி இடம்பெற்ற இந்த குற்றச்செயல் தொடர்பாகவே அதே வருடம் மார்ச் 26ஆம் திகதி சந்தேகநபர் கைது செய்யப்பட்டிருந்தார். கைதான சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டதை அடுத்து கடந்த எட்டு வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை மேல் நீதிமன்றில் தெரியவந்துள்ளது.

சந்தேநபருக்கு இதற்கு முன்னர் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் அதற்கு எவரும் முன்வராத காரணத்தினால் எட்டு வருடங்களாக தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

No comments

Powered by Blogger.