Header Ads



காத்தான்குடி மாணவர்களின் கல்விச் சாதனை தொடருகிறது - 13 மாணவர்களுக்கு 9 A பாடங்களில் சித்தி

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் காத்தான்குடியைச் சேர்ந்த 13 மாணவர்கள் 9 பாடங்களிலும் A திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்தில் நான்கு மாணவிகளும், மில்லத் மகளிர் வித்தியாலயத்தில் மூன்று மாணவிகளும், மீராபாலிகா தேசிய பாடசாலையில் மூன்று மாணவிகளும், மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் ஒரு மாணவனும் காத்தான்குடி கல்விக்கோட்டத்தில் 9A திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

* காத்தான்குடி பதுறியா வித்தியாலயம் - எம்.எப்.நஸ்ஹா,  ஏ.எச்.எப்.சிப்னா, ஏ.எச்.எப்.ஷஹானா, கே.எம்.எப்.றிப்லா
* மில்லத் மகளிர் வித்தியாலயம் - பி.இ.இப்திகா, எச்.எப்.ஷப்றா, கே.எம்.எப்.சுமையா

* மீராபாலிகா தேசிய பாடசாலை - ஏ.இ.அம்றா,என்.பஹீமா, ஏ.பி.இப்தியா

* மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலை - எம்.எச்.எம்.அப்துல்லா

* மட்டக்களப்பு சிசிலியா பாடசாலையிலிருந்து - ஏ.ஆர்.எப்.அஸ்பா

* மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி - யாசீர் யாசீன்

* ஆகியோர் 9 பாடங்களிலும் திறமை சித்திகளை பெற்றுள்ளனர்.

இதில் காத்தான்குடி பதுறியா வித்தியாலயத்திலிருந்து முதற் தடவையாக நான்கு மாணவிகள் 9 பாடங்களிலும் A திறமை சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.