லிபியாவில் பழங்குடியினர் மீது தாக்குதல் 10 பேர் மரணம்
லிபியா நாட்டின் தெற்குபகுதியில் உள்ள ஷபா நகரில் டோபு பழங்குடியினருக்கும் மற்றொரு பிரிவினருக்கும் இடையே நடைபெற்ற கடும் வன்முறையில் 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் பழங்குடியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதை அடுத்து, இப்பகுதியில் தொடர்ந்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன. மோதலை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக நேஷனல் டிரான்சிசனல் கவுன்சில் அமைப்பு தெரிவித்துள்ளது.
Post a Comment