யேமனில் அல்ஹைதா இராணுவம் நேரடி மோதல் - 100 க்கும் மேற்பட்டோர் மரணம்
ஏமனில் அதிபராக இருந்த அலி அப்துல்லா சலேவுக்கு எதிராக சுமார் 8 மாதங்களாக பொதுமக்கள் போராட்டம் நடந்தது. அதற்கு பணிந்த அவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த மாதம் துணை அதிபர் ஹாதியிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார்.
அங்கு, அல்கொய்தாகளின் தாக்குதல் அதிகரித்து விட்டது. நேற்று இரவு அபயான் மகாணத்தில் உள்ள ராணுவ முகாம்களில் புகுந்த அதிரடி தாக்குதல் நடத்தினார்கள்.
இதை தொடர்ந்து ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது. அதில், 107 ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமானவர்கள் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தாக்குதலில் அல்கொய்தாகளின் தரப்பில் 32 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.
இதற்கிடையே அபயான் மாகாண தலைநகர் ஷிஞ்சியாரில் உள்ள ராணுவ முகாமில் புகுந்த அல்கொய்தாகள் 55 வீரர்களை சிறை பிடித்தனர். அவர்களை அங்கு நடுரோட்டில் ஊர்வலமாக அழைத்து சென்றனர். கடந்த ஒரு ஆண்டாக இப்பகுதி தீவிரவாதிகள் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment