Header Ads



கடாபியின் மகனுக்கு பிரிட்டனில் 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண் பெறுமதியான ஆடம்பர பங்களா



லிபியாவை 32 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அவரது குடும்பமே வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளது. தற்போது லிபியாவை ஆட்சி செய்து வரும் புதிய அரசு, கடாபியின் குடும்பத்தினர் மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றது.

அரசாங்க பணத்தில் குடும்ப உறுப்பினர்கள் வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவித்துள்ளதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு அது லிபிய உயர் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.

கடாபியின் இளைய மகன் Saadi Gaddafi வடமேற்கு லண்டனின் Hampstead என்ற பிரதேசத்தில் 10 மில்லியன் ஸ்டேர்லிங் பவுண்கள் பெறுமதியான ஆடம்பர பங்களாவை வாங்கி இருப்பது லிபியாவின் இடைகால அரசுக்கு உத்தியோக பூர்வமாகத் தெரிய வந்துள்ளது

எட்டு படுக்கை அறைகள், நீச்சல் குளம், தியேட்டர், பெறுமதிமிக்க மரத்தளபாடங்கள் கொண்ட அந்த வீட்டை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.





No comments

Powered by Blogger.