Header Ads



பெண்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசாங்கத்திடம் தீர்வு இல்லையாம்

பெண்களின் உண்மையான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்திடம் உரிய திட்டமொன்று இல்லையென சோசலிச பெண்கள் ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே தேசிய அமைப்பாளர் சமன்மலு குணசிங்க தெரிவித்துள்ளார்.

மகளிர் விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி குறைக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள ஊழியர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட ஓய்வூதியம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெண்களுக்கான போஷாக்குப் பொதிகள் வழங்கப்படுவதில்லை சிறுவர்களுக்கான பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு 65 வீதமான பெண்கள் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமையால் அவர்களால் தாய்ப்பால் ஊட்ட முடியாது என்றும் சோசலிச பெண்கள் ஒன்றியத்தின் தேசிய அமைப்பாளர் சமன்மலு குணசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆரம்பப் பாடசாலைகளை கட்டியெழுப்புவதற்கு 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டிருந்தும் கடந்த வருடம் எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை அவர் குறிப்பிட்டார். வடக்கு கிழக்கு மாகாணங்களில் 90 ஆயிரம் விதவைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை குடும்பங்களை கட்டியெழுப்புவதற்கு வழங்குவதாக கூறப்பட்ட நிதி இதுவரையில் வழங்கப்படவில்லை அது வெரும் கனவு 2012 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் இது குறித்து ஆலோசனைகள் முன்வைக்கப்படவில்லை என்றும் தேசிய அமைப்பாளர் சமன்மலு குணசிங்க குறிப்பிட்டுள்ளார் 

No comments

Powered by Blogger.