Header Ads



இது வெட்கமா..?


ஐக்கிய நாடுகள் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை தாமே எழுதிக் கொடுத்ததாக பிரித்தானியாவின் பொதுஉறவுகள் நிறுவனமான பெல் பொட்டிங்கர் கூறியுள்ளது.  கடந்த ஆண்டு ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையில், மனிதாபிமானப் போர் தொடர்பாக மீளாய்வு செய்வதாகக் குறிப்பிட்ட விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தமது படையினரின் நடவடிக்கைகள் குறித்தும் விபரித்திருந்தார். 

அத்துடன் பொறுப்புக்கூறும் கொள்கையை முழுமையாக வெளிப்படுத்த தாம் ஆணைக்குழு ஒன்றை நியமித்துள்ளதாகவும் தனது உரையில் குறிப்பிட்டிருந்தார். இலங்கை வெளிவிவகார அமைச்சின் விருப்பத்தின் பேரில், இந்த அறிக்கையை தாமே தயாரித்ததாக பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரிகள் கூறியுள்ளனர். 

போர்க்குற்றங்கள் தொடர்பாக தனிநபர்களை பொறுப்புக் கூறுவதற்கு இந்த ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்று அனைத்துலக மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனிதஉரிமை அமைப்புகள் கடுமையாக விமர்சித்திருந்தன. 

“ஜனாதிபதி செயலகத்தில் நாங்கள் ஒரு குழுவை வைத்து பணியாற்றினோம். நாங்களே கடந்த ஆண்டு ஐ.நாவில் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நிகழ்த்திய உரையை எழுதிக் கொடுத்தோம். அதற்கு நல்ல வரவேற்புக் கிடைத்தது“ என்று பெல் பொட்டிங்கர் நிறுவனத்தின் தலைவர் டேவிட் வில்சன் கூறியுள்ளார். 

ஆனால் தாம் இலங்கை அரசுடனான தொடர்புகளில் சட்டவிரோதமாக எதையும் செய்யுமாறு ஆலோசனை கூறவில்லை என்றும் டேவிட் வில்சன் தெரிவித்துள்ளார். அனைத்துலக ஊடகங்களில் இலங்கை சார்பாக செய்திகளையும், கட்டுரைகளையும் வெளியிடும் பொறுப்பை பெல் பொட்டிங்கர் நிறுவனமே ஏற்றிருந்ததமை இங்கு கவனிக்கத்தக்கது.

No comments

Powered by Blogger.