Header Ads



சுதந்திரத்திற்கு பங்காற்றிய இலங்கையர்களின் பிள்ளைகள் மொரிஷியஸ் தீவில்


ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியின் போது, மொரிஷியஸ் தீவிற்கு நாடு கடத்தப்பட்ட 17 குடும்பங்கள் தொடர்பான தகவல்களை அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட கலாசார அமைச்சு தீர்மானித்துள்ளது.

சுதந்திரப் போராட்டத்திற்காக இந்தக் குடும்பங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுள்ளதாக அமைச்சர் ரீ.பி.ஏக்கநாயக்க கூறினார். இந்தக் குடும்பங்களுக்காக மொரிஷியஸ் தீவில் நினைவுச் சின்னம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களின் தனித்துவத்தைப் பிரதிபலிக்கும் வகையில் நினைவுச் சின்னத்திற்கு கௌரவ அஞ்சலி செலுத்துவற்காக மொரிஷியஸ் தீவின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கும் எண்ணியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதன்பொருட்டு ஜனாதிபதியின் பங்களிப்புடன் திட்டமொன்றை முன்னெடுக்க எண்ணியுள்ளதுடன், மொரிஷியஸ் தீவிற்கு நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் குறித்த தகவல்களை அடுத்த வருடம் ஜனவரி மாதம் அதிவிசேட வர்த்தமானி மூலம் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்தக் குடும்பங்களின் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் தலைமுறையினர் அந்த தீவில் வாழ்ந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.