Header Ads



குளோனிங் யானை வருகிறது


குளோனிங் முறையில் மீண்டும் 'மமூத்' யானையை உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கின்றனர். உலகில் கடந்த 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'மமூத்' என்ற மிகப்பெரிய உருவமுள்ள யானைகள் அதிக அளவில் இருந்தன. அவை உடலில் ரோமங்களுடன் நீண்ட பெரிய சுருண்ட தந்தங்களை கொண்டவை. அந்த யானை இனம் படிப்படியாக அழிந்தது. 

தற்போது ரஷ்யாவின் சைபீரியா வனப்பகுதியில் மட்டும் இந்த வகை யானைகள், மிக குறைந்த அளவில் உள்ளன. அழியும் விளிம்பில் உள்ள இந்த யானை இனத்தை மீண்டும் பெருக செய்ய ஏற்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

எனவே அவற்றை 'குளோனிங்' முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து வருகின்றனர். அதற்கான ஆராய்ச்சியில் ரஷியாவின் சக்கா குடியரசு மமூத் அருங்காட்சியகமும், ஜப்பான் கின்கி பல்கலைக் கழகமும் ஈடுபட்டுள்ளன.

 ஏற்கனவே, பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள மமூத் யானையின் தொடை எலும்பு மஜ்ஜை (போன்மேரேர்) பகுதியில் இருந்து எடுக்கப்படும் செல்களின் மூலம் 'குளோனிங்'  முறையில் உருவாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அந்த முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது. எனவே இன்னும் 5 ஆண்டுகளில் குளோனிங் 'மமூத்' யானைகள் உருவாகும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

No comments

Powered by Blogger.