Header Ads



சர்வதேசத்தில் இஸ்ரேல் தனிமையாகிறது - கதறியழும் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்


இஸ்ரேல் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டு வருவதைக் குறைப்பதற்கு அதன் அயல் நாடுகளுடனான உறவுகளை மேம்படுத்த வேண்டும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனெட்டா வலியுறுத்தியுள்ளார். 

இஸ்ரேலைத் தனிமைப்படுத்துவதற்கு சர்வதேச முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதனால் இஸ்ரேல் மீது முழுமையாக குற்றம் சுமத்த முடியாது எனவும் வோஷிங்டனில் உரை நிகழ்த்திய போது அவர் குறிப்பிட்டுள்ளார்.  இதன்போது பலஸ்தீனத்துடனான சமாதானப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறும் பனெட்டா அழைப்பு விடுத்துள்ளார். 

இஸ்ரேலின் பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வருவதாகவும், ஈரான் அணுவாயுத முயற்சியில் ஈடுபடுவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். அரபு நாடுகளில் அண்மையில் இடம்பெற்ற அமைதியின்மை காரணமாக பல நாடுகளின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக பனெட்டா தெரிவித்துள்ளார். 

இதன் காரணமாக பிராந்திய பாதுகாப்பை அதிகரிப்பதற்கு இஸ்ரேலுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசேடமாக துருக்கி, எகிப்து மற்றும் ஜோர்டானுடனான உறவுகளை இஸ்ரேல் மேம்படுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

No comments

Powered by Blogger.