Header Ads



மாற்றுத்திறனாளிகள் தினம்


உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் மாற்றுத்திறனாளிகள் வாழ்கின்றனர். இவர்கள் உடலளவில் பலவீனமாக இருந்தாலும் , மனதளவில் தைரியமாகவே உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடைக்கின்றன. ஆனால் "ஊனம்' என்ற ஒரே காரணத்தை வைத்து, அவர்களை இந்த சமூகம் சம அளவில் வாய்ப்பளிக்க மறுக்கிறது.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களின் பிரச்னைகளை புரிந்து கொண்டு, அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ம் ஆண்டு முதல் டிச., 3ம் தேதி சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அரசியல், சமூக, கலாசாரம், பொருளாதாரத்தில் மற்றவர்களைப் போல, மாற்றுத்திறனாளிகளுக்கும் உரிய வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைவருக்காகவும் நல்ல உலகத்தை படைக்க ஒன்று சேர்வோம்: மாற்றுதிறனாளிகளையும் வளர்ச்சியில் சேர்ப்போம்' என்ற மையக்கருத்து இந்தாண்டு முன்வைக்கப்படுகிறது. 

எத்தனை பேர்: உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாகவும் உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள மாற்றுத்திறனாளியாக உள்ள குழந்தைகளில் 90 சதவீதம் பேர் பள்ளிக்கு செல்வதில்லை என "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.

வசதிகள் தேவை: மேலை நாடுகளில் ஊனம் வெளியே தெரிய வேண்டும் என்ற அவசியமில்லை. ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட ஊனமுற்றவர்களாகவே கருதுகின்றனர். இன்னும் சில நாடுகள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களாக கருதி அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன.  வெளியில் தெரியும் படியான ஊனத்தை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு 

பொருளாதாரம் மேம்பட: ஊனமுற்றவர்களின் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சமூகத்தின் இரங்கல் பார்வையை பெற்றுக்கொண்டு ஊனமுற்றோர் ஒதுங்கி வாழ வேண்டும் என நினைப்பது தவறு. நாட்டின் முன்னேற்றத்தில் அவர்களின் நியாயமான பங்கேற்பை ஏற்க வேண்டும். தனியார் வேலைவாய்ப்பில் அவர்களுக்கு சலுகை அளிக்காவிட்டாலும், ஊனமுற்றவர்கள் என்பதற்காக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமையையும் பறித்து விடக்கூடாது.

No comments

Powered by Blogger.