Header Ads



'மஹிந்த மீது போத்தலை வீசவில்லை' – புலம்புகிறார் பிரதி அமைச்சர்


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நோக்கி தண்ணீர் போத்தலை விசியெறிந்த பிரதி அமைச்சர் சரண குணவர்த்தன தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். வரவுசெலவுத் திட்டத்தை மகிந்த ராஜபக்ச வாசித்துக் கொண்டிருந்த போது ஏற்பட்ட குழப்பத்தில், ரணில் விக்கிரமசிங்கவைக் குறிவைத்து சரண குணவர்த்தன தண்ணீர் போத்தலை வீசியிருந்தார். 

அது மகிந்த ராஜபக்சவுக்கு அருகே விழுந்தது. அதிலிருந்து தெறித்த தண்ணீர் மகிந்த ராஜபக்சவை நனைத்தது. இதையடுத்து சரண குணவர்த்தன ஒருவாரகாலம் நாடாளுமன்றத்தில் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிட்டுள்ள சரண குணவர்த்தன, தான் நாடாளுமன்றத்தில் எந்தத் தவறையும் செய்யவில்லை என்றும், தனக்கு வழங்கப்பட்ட தண்டனை அநீதியானது என்றும் தெரிவித்துள்ளார். குழப்பம் இடம்பெற்றபோது பதிவான காணொலியில் தனது படம் பதிவாகவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

ஆனால் கண்காணிப்பு காணொலிப் பதிவுக்கருவியில் இவர் தண்ணீர்ப் போத்தலை வீசும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளதாக  நாடாளுமன்ற வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 

No comments

Powered by Blogger.