Header Ads



பரீட்சை முடிவுக்கு அச்சம் - தற்கொலையை பேஸ்புக்கில் பதிவிட்ட மாணவன்

பரீட்சையில் தோல்வியைத் தழுவலாம் என அச்சமடைந்த மாணவர் ஒருவர், தான் பரீட்சையில் சித்தியடைந்துள்ளதைக் கூட அறியாத நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்கு யோர்க்ஷயரிலுள்ள வேக்பீல்ட் எனும் இடத்தைச் சேர்ந்த ஜக் கோர்னர் கிளார்க் என்ற 18 வயது மாணவரே, பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவருவதற்கு சில தினங்களுக்கு முன் பல மாடிகள் கொண்ட கார்த் தரிப்பிடமொன்றலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அவர் மஞ்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் துறையில் கல்வி கற்க விரும்பியிருந்தார். ஆனால் தான் பரீட்சையை சரியான முறையில் எழுதவில்லையோ என்ற சந்தேகம் அவருக்கு ஏற்பட்டதால் பரீட்சைத் தோல்வியை சந்திக்க தைரியமில்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்வதற்கு முன் ஜக் தற்கொலைத் திட்டம் தொடர்பில் அவர் தனது "பேஸ்புக்' இணையத்தள நண்பர்களுக்கு தெரிவித்துள்ளார். அவர் பரீட்சை ஆங்கிலத்திற்கு ஏ தர சித்தியும் வரலாற்றுக்கு பி தர சித்தியும் உயிரியலுக்கு சி தர சித்தியும் பெற்று சித்தியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.