Header Ads



முஸ்லிம் காங்கிரசுக்கு எத்தனை வயது..?


அஷ் ஷேய்க் மஸீஹுதீன் இனாமுல்லாஹ்

1981.09.21 காத்தான்குடி பட்டின சபைத் தலைவரின் (அஹமது லெப்பை ) தலைமையில் கூடிய ஒரு கூட்டத்தில் கத்தான் குடியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தோற்றுவிக்கப் பட்டது 1986.11.29 முஸ்லிம் காங்கிரசின் ஆறாவது தேசிய மாநாடு தெமட்டகொட பாஷா வில்லாவில் இடம் பெற்றது, எனவே முஸ்லிம் காங்கிரசுக்கு வயது முப்பதாக இருக்க நேற்று கொழும்பு நகர மண்டபத்தில் எவ்வாறு 25 என கருதி வெள்ளி விழா கொண்டாடினர் என்பது எனக்கு பெரும் குழப்பமாக இருக்கிறது.

1988 பெப்ரவரி 11 ஆம் திகதி தேர்தல் ஆணையாளரால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பதிவு செய்யப் பட்ட அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற்றது. 

1886 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி பகிரங்கமாக கொழுபில் தம்மை முஸ்லிம் அரசியல் கட்சியாக அறிமுகப் படுத்திக் கொண்டாலும் தெமட்டகொட பாஷா வில்லா மாநாட்டில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனது ஆறாவது தேசிய மாநாட்டை நடாத்தி அரசியல் கட்சி புதிய பதவி தாங்குனர்களையும் தெரிவு செய்தது. தேர்தல் ஆணையாளருக்கு பதிவுக்காக வழங்கப்பட்ட ஆவணங்களிலும் ஆறு வருட கால அரசியல் செயற்பாடுகள் ஆவணப் படுத்தப் பட்டு சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் முன்னால் அரசியல் பீட அதி உயர்பீட உறுப்பினர் என்ற வகையிலும் அதன் மஜ்லிஸ் அல்ஷோஉறவின் முன்னால் தலைவர் என்ற வகையிலும் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஹசனலிமிருந்து ஒரு தெளிவை எதிர் பார்க்கின்றேன்! 

அசௌகரியங்களுக்காக மன்னிக்கவும்! இது எமது வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியாகும் என்பதனால் - சில வேலை நான் கூறுவது தவறாக இருப்பின் அதனையும் சுட்டிக் காட்டுமாறு சக தோழர்களிடம் வேண்டிக் கொள்கின்றேன்.

No comments

Powered by Blogger.