Header Ads



பிரிட்டனில் கொல்லப்பட்ட இலங்கையர் அடையாளம் காணப்பட்டார்


பிரித்தானியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் வைத்து கடந்த இரு தினங்களுக்கு முதல் கத்திவெட்டுக்குள்ளாகி கொலை செய்யப்பட்டவர், இலங்கையில் நீர்கொழும்பு மாதம்பையைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஹப்புகாமிலாகே ஏ. மகேஸ் விக்கிரமசிங்க என்ற 30 வயதான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேலும் கொலைச் சந்தேக நபரைப் பிடிப்பதற்கு பொலிஸார் பல்வேறு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், வர்த்தக நிலையத்திற்கு அருகாமையில் இரு சாரதிகள் வாகனத்தில் சென்றுள்ளமை பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு ஒளிப்படக் கருவி மூலம் அவதானிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வாகனங்களின் ரகங்கள் மற்றும் நிறங்கள் பற்றியும் பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் இவர்களின் மூலம் கொலைச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட் டுள்ளனர். பிரிட்டனில் பத்திரிகை முகவர் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்த சிங்கள இளைஞன் ஒருவர் கடந்த செவ்வாய் இரவு 9.30 மணி அளவில் முகமூடி அணிந்த நபர் ஒருவரால் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இக் கடை சிங்கள வர்த்தகர் ஒருவருக்கு சொந்த மானது. இளைஞன் ஒரு வருடத்துக்கு முன் பிரிட்டன் வந்து இருந்தார். 

இவருக்கு பத்து வயதுக்கு உட்பட்ட இரு குழந்தைகள். இளம் மனைவி, குழந்தைகள் இலங்கையில். இக்கொலை கொள்ளை யர்களால் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மாறாக இன ரீதியாக மேற் கொள்ளப்பட்டு இருக்கின்றது எனவும் பரவலாக நம்பப்படுகின்றது. கடந்த காலங்களிலும் லண்டன் மற்றும் அதை அண்டிய இடங்களில் இனத் துவேசத்தின் அடிப்படையில் ஆங்காங்கு சில சம்பவங்கள் இடம்பெற்று இருக்கின்றன. ஆனால் படுகொலை ஒன்று இடம்பெற்று இருக்கின்றமை இதுவே முதல் தடவை ஆகும். 

இது இனத்துவேசத்தின் அடிப்படையில் நடத்தப்பட்ட தாக்குதல் மாத்திரமே என்று அடித்துக் கூறுகின்றார் கடை உரிமையாளர். புலனாய்வாளர்கள் தீவிர விசாரணைகளை முடுக்கி விட்டு உள்ளனர். இத்தாக்குதல் இனத்துவேசத்தின் அடிப்படையானது என்று செய்திகள் பரவியமையை அடுத்து இலண்டனில் தமிழர்கள் செறிந்து வாழ்கின்ற பகுதிகளில் ஒரு வகையான பீதி நிலவுகின்றது. 

இருப்பினும் இக்கொலைச்சம்பவம் இனத்துவேசத்தால் இடம்பெற்றது என்பதற்கான சான்றுகள் இல்லை. பொலிஸாரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்று இலண்டன் செய்திகள் கூறுகின்றன.

No comments

Powered by Blogger.