Header Ads



அமெரிக்க நிதி வேண்டாம் - வீரவன்ச, சம்பிக்க போர்க்கொடி


அமெரிக்க பசுபிக் கடற்படை வடக்கு மாகாணத்தில் ஒட்டுசுட்டான், முழுங்காவில், பூநகரி, பளை ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளில் யுத்தத்தில் சேதமடைந்த ஆஸ்பத்திரிகளை புனரமைத்துக் கட்டுவதற்கு நிதி வழங்க முன்வந்துள்ளதை ஏற்கக்கூடாது என்று அமைச்சரவைக் கூட்டத்தில் சாம்பிக்க ரணவாக்க மற்றும் விமல் வீரவன்ச ஆகிய அமைச்சர்கள் ஏற்கக்கூடாது என்று கடுமையான வற்புறுத்தினர் என்றும் அவர்களின் எதிர்ப்பை ஜனாதிபதி உதாசீனம் செய்து விட்டார் என்றும் கொழும்பிலிருந்து வெளிவரும் சிலோன் ருடே என்ற ஆங்கிலத்தினசரி செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க பசுபிக் கடற்படையிடமிருந்து 190 மில்லியன் ரூபா நிதி உதவியை பெறுவதற்கு சம்மதம் தெரிவிக்கும் பிரேரணை ஒன்றை சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிரிசேன நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சமர்ப்பித்தார்

அப்போதே அமைச்சர்களான ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த சம்பிக்க ரணவாக்கவும் தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த விமல் வீரவங்கசாவும் அதனை வலு ஆக்ரோஷமாக எதிர்த்தனர் என்றும் அதனால் அமைச்சரவை க்குட்டத்தில் களேபரம் ஏற்பட்டது என்றும் அப்பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய அமைச்சர்கள் அமைச்சர் மைத்திரிபால சிரிசேன கொண்டு வந்த பிரேரணைக்கு பூரண ஆதரவை வழங்கினர்.

அமெரிக்க பசுபிக் கடற்படையிடமிருந்து கிடைக்கும் நிதி மறைமுக பின்னணியைக் கொண்டது என்றும் இது நாட்டின் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் என்றும் அமெரிக்க பசுபிக் கடற்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கு முன்னர் தொடர்பு இருந்ததாகவும் சம்பிக்க ரணவாக்கவும் விமல் வீரவங்சாவும் அமைச்சரவையில் தெரிவித்தனர்.

இவ்விருவரின் எதிர்ப்புக்களுக்கு ஜனாதிபதி செவிசாய்க்காது அமைச்சர் மைத்திரபால சிரிசேன கொண்டு வந்த பிரேரணைக்கு தனது சம்மதத்தை தெரிவித்தார் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களான ஜி.எல் பீரிஸ், சரத் அமுனுகம மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் அமெரிக்க பசுபிக் கடற்படையிடமிருந்து நிதி உதவி பெறும் பிரேரணையை உற்சாகமாக வரவேற்றனர் என்றும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.