Header Ads



சிரியாவில் தினமும் மக்கள் மரணம் - ஏவுகணை வழங்குகிறது ரஷ்யா


சிரியாவில் அதிபர் பஷர் அல்-ஆசாத் அரசுக்கு எதிராக போராட்டம் நடந்து வருகிறது. இதை தொடர்ந்து போராடும் மக்களை ராணுவம் மூலம் கொன்று குவிக்கும் சிரியாவுக்கு பொருளாதார தடையும், தற்காலிக வணிக தடையும் ஐ.நா. சபை விதித்துள்ளது. 

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சிரியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளன. ஆனால் ரஷியாவோ அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை. மாறாக ஆயுத உதவி வழங்கியுள்ளது.   

கப்பலை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை வழங்கியுள்ளது. அதற்கு “யாக்னாட்” என்று பெயர். இதற்கான ஒப்பந்தம் கடந்த 2007-ம் ஆண்டு போடப்பட்டது. அதன்படி சிரியாவுக்கு 72 “யாக்னாட்” ஏவுகணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது 300 கி.மீட்டர் தூரம் பாய்ந்து சென்று கப்பலை தாக்க கூடியது.   

இதேபோன்று பிரமோஸ் ஏவுகணை இந்திய ரஷியா கூட்டு தயாரிப்பில் உருவாக்கப்பட்டது. ஆனால் அவற்றை இந்திய கம்ப்யூட்டர் மற்றும் கப்பல் போக்குவரத்து சிஸ்டம் மூலமே இயக்க முடியும். ஆனால் சிரியாவுக்கு வழங்கப்பட்டுள்ள “யாக்னாட்” ஏவுகணை சிரியா ராணுவத்துக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ரஷிய செனட்டரும் வடக்கு பகுதி முன்னாள் கமாண்டருமான போபோவ் தெரிவித்துள்ளார்.  

No comments

Powered by Blogger.