Header Ads



அடுத்தவருடத்தில் கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் - அமைச்சர் பந்துல


கல்வித்துறையில் பல புரட்சிகர மாற்றங்களை மேற்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு மே மாதமளவில் புதிய கல்விச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்படும். இதன்மூலம் நவீன உலகுக்கும் அதன் சவால்களுக்கும் முகம் கொடுக்கக் கூடிய வகையில் கல்வித்துறை மாற்றியமைக்கப்படும். இவ்வாறு கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற பிரியாவிடை நிகழ்வின் போது உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கல்வி அமைச்சின் மேலதிக செயலாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் கே. முஹம்மத் தம்பி அவர்களினால் ஒழுங்கு செய்யப்பட்ட பகற்போசன வைபவத்தின் போது அமைச்சர் இக்கருத்தை தெரிவித்தார். கல்வி அமைச்சின் செயலர் எச். எம். குணசேகர உள்ளிட்ட பல உயர் அதிகாரிக ளும், உத்தியோகத்தர்களும் கலந்து கொண்ட வைபவத்தில் அமைச்சர் பந்துல குணவர்தன தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கல்வித் துறையில் பல புரட்சிகர மாற்றங்களை மேற்கொண்டு கல்வியின் மூலமாக நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெளிவான கொள்கைகளை முன் வைத்துள்ளார். இதனை நடைமுறைப்படுத்துவதற்கு கல்வித் துறையில் இளம் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்புக்களை வழங்க வேண்டும். னுபவம் என்ற விடயத்தை வைத்துக்கொண்டு இளம் அதிகாரிகளின் உரிமைகளை எவரும் தட்டிப்பறிக்க இடமளிக்க முடியாது. இதற்கமைய அரச துறையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மீள் நிவாரணம் வழங்கும் விடயத்தில் அமைச்சரவை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கல்வித்துறையில் 60 வயதுக்கு மேற்பட்ட எவருக்கும் ஒப்பந்த அடிப்படையில் எந்த அதிகாரிக்கும் மீள் நியமனம் வழங்கப்படமாட்டாது. அதற்கான சிபாரிசுகளை மேற்கொள்ளக் கூடாது என நான் மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும், அமைச்சின் செயலாள ருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளேன்.

ஓய்வுபெற்றுச் செல்லும் மேலதிக செயலாளர் கே. முஹம்மட் தம்பி சிறந்த மும் மொழித் தேர்ச்சியுள்ளவர். இவரின் அனுபவங்கள் இளம் அதிகாரிகளுக்கு முன்மாதிரியானதாகும். அரச கொள்கைகளை யும் கல்வி அமைச்சின் கொள்கைகளையும் நடைமுறைப்படுத்துவதில் ஏனையோருக்கு முன்மாதிரியான அதிகாரியாக விளங்கினார் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.