Header Ads



கலாநிதி காமில் ஆஸாத் வபாத்தானார் - புத்தளத்தில் ஜனாஸா நல்லடக்கம்


பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அறபு இஸ்லாமிய நாகரிகத்துறை முன்னாள் தலைவர் கலாநிதி எம்.என்.எம். காமில் ஆஸாத் காலமானார். அவரது ஜனாஸா இன்று (01.12.2011) மாலை 4 மணியளவில் புத்தளம் பெரிய பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

இவர் தென்கிழக்கு, கிழக்கு, கொழும்பு ஆகிய பல்கலைக்கழகங்களில் இஸ்லாமிய கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கு துணையாக நின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது காலப்பகுதியில் இஸ்லாமிய நாகரிகத்துறை முதுகலைமானி, முதுதத்துவமானி என்பன போராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். அறபு மொழிக் கற்கையில் சிறப்புத் தேர்ச்சிக் கலைமானிக்கான கற்கைநெறி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

முன்னாள் நிதி அமைச்சர் நெய்னா மரைக்கார் அவர்களின் புதல்வரான இவர் தனது கலாநிதிக் கற்கையினை பிரித்தானியாவில் மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

No comments

Powered by Blogger.