Header Ads



டைட்டானிக் கப்பல் விபத்தை தவிர்த்திருக்கலாம்..!


டைட்டானிக் கப்பலை மூழ்காமல் காப்பாற்றி இருக்க முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.  கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1912-ம் ஆண்டு ஏப்ரல் 10-ந்தேதி டைட்டானிக்” என்ற பயணிகள் சொகுசு கப்பல் அட்லாண்டிக் கடலில் மூழ்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு புறப்பட்டு சென்ற அந்த கப்பலில் 2,223 பேர் பயணம் செய்தனர். 

அக்கப்பல் புறப்பட்ட 4 நாட்களில் ராட்சத பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. அதை தொடர்ந்து கப்பலில் துளை ஏற்பட்டு கடலில் மூழ்கியது. அந்த விபத்தில் கப்பலில் பயணம் செய்த சுமார் 1496 பேர் உயிரிழந்தனர். இந்த மிகப்பெரிய விபத்தை அப்போது தவிர்த்து இருக்க முடியும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. 

கப்பல் செல்லும் வழியில் ராட்சத பனிப்பாறை இருப்பதை கப்பலின் தலைமை அதிகாரி வில்லியம் முர்டோக் பார்த்து எச்சரிக்கை தகவல் கொடுத்தார். ஆனால் கப்பலை கட்டுப்படுத்தி ஓட்டிச் செல்வதற்காக மேற்புறத் தளத்தில் பணியில் இருந்த மற்றொரு பொறுப்பு அதிகாரியிடம் இருந்து மாலுமிகளுக்கு தகவல் வர 1/2 நிமிடம் தாமதமாகி விட்டது.

அந்த 1/2  நிமிட நேரமே கப்பல் ராட்சத ஐஸ் பாறையின் மீது மோதி விபத்து ஏற்பட காரணமாகி விட்டது. அந்த அதிகாரி ராட்சத ஐஸ் பாறை இருக்கும் தகவலை உடனடியாக தெரிவித்து இருந்தால் மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. 

No comments

Powered by Blogger.