Header Ads



டுபாயில் திருடிய இலங்கை பெண் - இந்தியா, எதியோப்பிய பெண்கள் ஒத்துழைப்பு


டுபாயில் திருடிய இலங்கை பெண் - இந்தியா, எதியோப்பிய பெண்கள் ஒத்துழைப்பு

128,000 டுபாய் திர்காம் பணம் மற்றும் மூன்று கையடக்கத் தெலைபேசி என்பவற்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. RD, 25, என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் மீது டுபாய் குற்றத்தடுப்பு நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தில் குறித்த இலங்கைப் பெண் குற்றவாளி என நேற்றைய தினம் (05) டுபாய் குற்றத்தடுப்பு நீதிமன்றம் அடையாளம் கண்டுள்ளது. கடந்த ஒக்டோர் 20ம் திகதி ஹட்டா நகரிலுள்ள மாடிக்குடியிருப்பு வீட்டில் இந்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக பெண் வீட்டு உரிமையாளர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஒக்டோபர் 20ம் திகதி காலை 6.40 மணிக்கு 128,000 டுபாய் திர்காம் மற்றும் மூன்று கையடக்கத் தெலைபேசி தனது வீட்டில் இருந்து இலங்கைப் பணிப்பெண் திருடியதாக SK, 44, என அடையாளப்படுத்தப்பட்டுள்ள வீட்டு பெண் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

திருட்டுச் சம்பவத்தை இலங்கைப் பெண் மறுத்தால் அவரை சோதனை செய்யுமாறு கேட்கப்பட்ட பின், பெண் பொலிஸார் குறித்த இலங்கைப் பெண்ணிடம் சோதனை செய்துள்ளனர். அப்போது அவரிடமிருந்து 1,520 டுபாய் திர்காம் பணம் மற்றும் இரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அத்துடன் இலங்கைப் பணிப்பெண்ணின் கை பையில் இருந்து 3, 200 டுபாய் திர்காம் பணம் மற்றும் தொலைபேசி பண நிறப்பு அட்டைகள் என்பவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில் தான் 28,000 டுபாய் திர்காம் பணத்தை மாத்திரமே திருடியதாக இலங்கைப் பணிப்பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். 

இந்த திருட்டுச் சம்பவத்திற்கு இந்தியா மற்றும் எத்தியோபப்பிய நாட்டுப் பணிப்பெண்கள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதேவேளை, வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக டுபாய் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

No comments

Powered by Blogger.