Header Ads



எனக்கு ஐந்தாறு மனைவியர் இருக்கக் கூடாதா..? அமைச்சர் மேர்வின்




பல மனைவிகளை வைத்திருப்பதே அரசர்களுக்குப் பெருமை. அதுவே அவர்களுக்கு கௌரவம். எனக்கும் பல மனைவியர் இருக்கின்றனர். எனது திறமையை நான் நிரூபித்துள்ளேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பி யும் நிரூபித்துள்ளார் என்பதுடன் சேவலின் வேலை கொத்துவதாகவும் அது எங்கு கொத்தினாலும் கொத்தியதுதான் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

"அரசர்களுக்கு பல மனைவிமார் இருப்பதே அவர்களுக்குப் பெருமை. எனினும் நான் இரத்தினபுரிக்கு அடிக்கொரு தடவை சென்றுவருவதாக இங்கு தெரிவிக்கின்றனர். எனது உறவினர் வீட்டில் இடம்பெற்ற வைபவத்துக்கே நான் சென்றிருந்தேன். அதில் தவறில்லை. 

நான் மனிதர்களை சம்பாதித்துள்ளேன். அவர்களின் வீடுகளுக்குச் செல்ல வேண்டும். விஜயன், எல்லாளன், குவேனி வரலாற்றுக் கதைகளில் கூறப்படுவதைப் போல் இவர்கள் தாம் செல்கின்ற வேளையில் தமக்குப் பின்னால் ஒரு பட்டாளத்துடனேயே செல்வர். அன்று தயாசிறி எம்.பி இருந்திருந்தால் விஜயன், எல்லாளன், குவேனி போன்றோரை தனியாகச் செல்லுமாறே ஆலோசனை வழங்கியிருப்பார். 

அது புதுமையான ஆலோசனை. எனினும் இவர் பலருடன் சென்றிருப்பார்.  அரசர்களுக்கு ஐந்தாறு மனைவியரும் அந்தப்புரமும் இருக்குமாயின் எனக்கு ஏன் ஐந்தாறு மனைவியர் இருக்கக் கூடாது? அதற்கான தகுதி எனக்கிருக்கிறது. 

எனது திறமையை நான் காண்பித்திருக்கிறேன். எதிர்காலத்திலும் காண்பிப்பதற்குத் தயாராக இருக்கிறேன். என்னைப்போலவே தயாசிறி எம்.பியும் தனது திறமையை வீட்டுக்குள்ளும் கிராமத்திலும் மாகாணத்திலும் ஏன் நாடளாவிய ரீதியிலும் காண்பித்திருக்கிறார். 

No comments

Powered by Blogger.