Header Ads



சுற்றுலாசெல்ல உகந்த நாடு பட்டியல் - இலங்கைக்கு 6 ஆவது இடம்

தேசிய புவியியல் பயணர் சஞ்சிகையின் (National Geographic Traveler magazine) புதிய கணிப்பீட்டின்படி சுற்றுலாப் பயணிகளுக்கு உகந்த நாடுகள் தரப்படுத்தலில் இலங்கைக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. இலங்கையின் மத்திய மலை நாட்டில் உள்ள அழகிய தேயிலை தோட்டங்கள், மலைகள் மற்றும் பாரம்பரிய தளங்கள், அழகிய கடற்கரைகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தரப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இந்த தரப்படுத்தல் குறித்த அறிக்கை ஒன்றை தேசிய புவியியல் பயணர் சஞ்சிகை வெளிவிவகார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ளது. உலக பாரம்பரியங்கள் என்ற பட்டியலில் இலங்கையின் மத்திய மலைநாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. மத்திய மலைநாட்டில் காணப்படும் அழகிய மலைகள், மூடுபனி, அதிர்ச்சி தரும் இயற்கைக்காட்சி, தேயிலை தோட்டங்கள், மற்றும் பண்டைய புத்த கோயில்கள் அம்சங்கள் என்பன இதற்கு தூண்டுகோளாக அமைந்துள்ளன. 

2010ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் சுற்றுலாத் துறை 52 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. 750,000 சுற்றுலா பயணிகளை கண்டுள்ள இலங்கை 2016ல் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்துள்ளது. இதனால் இலங்கையில் 2015ம் ஆண்டுக்கு முன் 30,000 ஹோட்டல்களை அமைக்க இலங்கை சுற்றுலா சபை எதிர்பார்த்துள்ளது. 

No comments

Powered by Blogger.