Header Ads



பெண் கொடுக்க மறுப்பு - பழிவாங்க 3 குழந்தைகளை கொன்ற இளைஞன்

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை அடுத்த கோபாலபட்டினத்தைச் சேர்ந்தவர் அப்பாராவ் (30). வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் 22 வயதில் இருந்து தனக்கு பெண் பார்த்து வந்தார். ஆனால் அவருக்கு யாரும் பெண் தரவில்லை.

இதனால் அவர் வெறி பிடித்தவர் போல் மாறினார். அவரது முன்னால் பெற்றோர் யாராவது குழந்தைகளை கொஞ்சினால் பிடிக்காது. அந்த குழந்தைகளை ஓடிச்சென்று தாக்குவார்.

அவர் சைக்கோவாக மாறியதால் அப்பாராவ் தெருவில் வந்தால் அப்பகுதி மக்கள் கதவை பூட்டிக்கொள்வார்கள். அவரிடம் பேசுவதையும் நிறுத்திக்கொள்வார்கள்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அப்பாராவ் தெருவில் நடந்து வந்து கொண்டிந்தபோது சிந்துஜா என்ற குழந்தை கண்ணில் பட்டது. உடனே அக்குழந்தையை தூக்கிக்கொண்டு அங்குள்ள கிணற்றுக்கு தூக்கிச் சென்றார். பின்னர் சிந்து ஜாவின் கழுத்தை நெரித்து கொன்று கிணற்றில் வீசினார். இதில் சிந்துஜா பரிதாபமாக இறந்து போனார்.

இதேபோல் வீட்டு முன்பு விளையாடிக்கொண்டிருந்த வெங்கு மகந்தி, ஆகாஷ் ஆகிய 2 குழந்தைகளையும் கொன்று கிணற்றில் வீசினார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஒரே மாதத்தில் 3 குழந்தைகள் அப்பாராவால் கொல்லப்பட்டதால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்தனர்.

இதுபற்றி கோபாலபட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பாராவை கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தனக்கு யாரும் பெண் தராததால் வாழ்க்கையே வெறுத்துவிட்டது. என் கண் எதிரில் எந்த பெண்ணாவது குழந்தையை கொஞ்சினால் எனக்கு பிடிக்காது.

நாளாக நாளாக பெண்கள் மீதுள்ள வெறுப்பு குழந்தைகள் மீது திரும்பியது. இதனால் தெருவில் விளையாடிய 3 குழந்தைகளை கொன்றுவிட்டேன் என்றான். இதையடுத்து அவன் அங்குள்ள கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

No comments

Powered by Blogger.