Header Ads



நாட்டில் 3,964 இஸ்லாமிய மெளலவிகள் உள்ளனர் - பிரதமர் தகவல்



அனைத்து இன மதங்களும் சமமாக மதிக்கப்படும் நாட்டில் அரசியல், மத ரீதியாக பிரிவினையைத் தூண்டும் செயற்பாடுகளில் எவரும் ஈடுபடக்கூடாது என பிரதமர் டி. எம். ஜயரட்ன பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் மத அலுவல்கள் அமைச்சின் குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய பிரதமர், ஒரே நாட்டின் மக்கள் என்ற வகையில் சகல இன மத மக்களையும் சமமாக மதித்து சமமாக நிதியுதவிகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமெனவும் தெரிவித்தார்.

பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நாட்டில் 42,660 பெளத்த பிக்குகளும் 1,113 இந்துக் குருக்களும், 3,964 இஸ்லாமிய மெளலவிமாரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே விதமாக கெளர விக்கப்படுவதுடன் அவர்களுக்கான சலுகைகளும் சமமாகவே வழங்கப் படுகின்றன.

சகலரும் தத்தமது மதத்தினை வழிபடுவதற்கான உரிமை இருக்க வேண்டும். அதேநேரம் ஏனைய மதங்களையும் மதித்து நடக்க வேண்டியது முக்கியம். ஏனைய நாடுகளைப் பார்க்கும் போது எமது நாட்டில் இன, மத, ஐக்கியம் சிறப்பாகவுள்ளன எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.


No comments

Powered by Blogger.